"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

04365 - 241444

Inauguration of College of Fish Nutrition and Food Technology & Orientation programme of I year B.Tech (Food Technology)-2018-19 batch

மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரியின் தொடக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு (2018-2019) பி.டெக் (உணவு தொழில்நுட்பம்)  பட்டப்படிப்பு  ஆரம்ப விழா

மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரியின் தொடக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு (2018-2019) பி. டெக் (உணவு தொழில்நுட்பம்)  பட்டப்படிப்பு மாணவர்களின் ஒருங்கிணைப்பு விழாவானது தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சென்னையில் உள்ள மாதவரம் வளாகத்தில் 17.09.2018 அன்று நடத்தப்பட்டது.  தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் இக்கல்வியாண்டு முதல் சுயநிதி முறையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட இப்படிப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இந்த  நான்காண்டு பட்டப்படிப்பின் மாணவர் சேர்க்கை வருடத்திற்கு 40 ஆகும்.
மாண்புமிகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் இணைவேந்தரான                                         திரு. னு. ஜெயக்குமார் அவர்களால் இக்கல்லூரியானது திறக்கப்பட்டு, பி.டெக் (உணவு தொழில்நுட்பம்) பட்டப்படிப்பு சேர்க்கை அட்டை 40 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாண்புமிகு அமைச்சர், “தமிழகத்தின் மீன்வள முன்னேற்றத்திற்கான திட்டம்” பற்றிய குறுந்தகடையும் “உயிர்க் கூழ் தொழில்நுட்பம்” பற்றிய புத்தகத்தினையும் வெளியிட்டார்.  தலைமை விருந்தினர் அறிக்கையில், இந்திய உணவு தொழில் துறையானது வெகுவாக வளர்ந்து வருவதாகவும், உலக உணவு வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பானது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும் மாண்புமிகு அமைச்சர் எடுத்துரைத்தார்.
இந்தியாவில் உணவுத் துறையானது உணவு பதப்படுத்தும் துறையில்,   அதிக வளர்ச்சி மற்றும் அதிக லாபம் கொண்ட துறையாக வளர்ந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், அவர் கூறுகையில் தமிழ்நாடானது கடல் மீன் உற்பத்தியில் முக்கிய பங்களிக்கும் மாநிலங்களில் ஒன்றாக திகழ்வதால் மாணவர்கள் கடல் உணவு தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பினை அதிகமாக பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக  கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான  பேராசிரியர். சுக. பெலிக்ஸ், தனது அறிக்கையில், உணவு தொழில்நுட்பத்துறையானது, இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்துறையாக வளர்ந்துள்ளதாக கூறினார்.  மேலும், அவர் உணவு தொழில்நுட்ப படிப்பின் அவசியத்தையும் அதில் தரக்கட்டுபாட்டு நுண்ணுயிரியியலாளர், தர உறுதிப்பாட்டு வல்லுநர், உணவு பாதுகாப்பு வல்லுநர், உணவு அறிவியலாளர் மற்றும் உணவு உற்பத்தி வளர்ச்சி மேலாளர் போன்ற வேலை வாய்ப்புகள் உலகளவில் இருப்பதையும்  எடுத்துரைத்தார்.
சென்னை,  மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு)  முனைவர்.  நா.பெலிக்ஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.   இறுதியாக  பொன்னேரி, டாக்டர். எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர்.  ப. அகிலன் அவர்கள்  நன்றியுரை வழங்கினார்.  

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Inauguration of College of Fish Nutrition and Food Technology

&

Orientation programme of I year B.Tech (Food Technology)-2018-19 batch

Inauguration of College of Fish Nutrition and Food Technology and orientation programme of first year B.Tech (Food Technology) 2018-19 batch was held at Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University (TNJFU) Madhavaram Campus, Chennai on 17.09.2018. The total intake capacity of this four year course is 40 and the students from all over Tamil Nadu got admission in the new course introduced in TNJFU from this academic year on self financing mode.

The College was declared open by Hon’ble Minister for Fisheries and                               Pro Chancellor of TNJFU, Thiru. D. Jayakumar and issued B.Tech (Food Technology) admit cards to 40 students. The Minister released a CD on “Road Map for the Development of Fisheries in Tamil Nadu” and also book on “Biofloc Technology”. In the Chief Guest address, Minister emphasised that the Indian food industry is poised for huge growth, increasing its contribution to world food trade every year. In India, the food sector has emerged as a high-growth and high-profit sector due to its immense potential for value addition, particularly within the food processing industry. He further said that, Tamil Nadu is the one of the largest contributors to Marine fish production in the country and therefore students can get job opportunities in sea food industries in particular.  Prof. S. Felix, Vice Chancellor, TNJFU, in his presidential address delivered that the Food Processing Industry has emerged as one of the important segment in terms of its contribution to Indian economy and highlighted the need of the food technology course and listed some of the available job opportunities like product development manager, quality control microbiologist, quality assurance specialist, food safety specialist and food scientists.

 

Dr. N. Felix, Dean incharge welcomed the gathering and vote of thanks was delivered by Dr. B. Ahilan, Dean, Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------