"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

04365 - 241444

கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை கட்டிடங்களை முதலமைச்சர் தலமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் திரு .எடப்பாடி கே. பழனிசாமி  அவர்கள் 4.3.2019 அன்று தலமைச் செயலகத்தில் , மீன்வளத் துறை  சார்பில் அமைக்கப்பட்டடுள்ள மீன்பிடி  துறைமுகம் , மீன் இறங்குதளங்கள், வலைபின்னும் கூடங்கள்,  மீன்குஞ்சு வளர்ப்பு மையக்கூடம் , சுய உதவிக்குழு மகளிர் பயிற்சி மையத்துடன் கூடிய சமையலறைக்கூடம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கட்டப்பட்டடுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வகக் கட்டடம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் - பள்ளப்பட்டியில் கால்நடை மருத்துவமனைக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள் . மேலும் , தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்படவுள்ள கூண்டுகள், தொழில்நுட்ப பூங்கா, மீன்வளப் பயிற்சி  நிலையக் கட்டடம், கல்விக் கட்டடங்கள், நன்னீர் அலங்கார சினைமீன்கள் உற்பத்தி  மையம்  ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்கள்.