TNJFU ranked as No. 1 State Agricultural University in Tamil Nadu and 25th among the SAUs in India by the ICAR, New Delhi

"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

04365 - 241444

National Workshop on “Scaling Solutions for fair trade in Aquaculture – Chola Aqua 2020” Conducted on 29-02-2020 at the University Headquarters

Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University organized a National Workshop on “Scaling Solutions for fair trade in Aquaculture – Chola Aqua 2020” on 29-02-2020 at the University headquarters for the second time. Mr.O.S. Manian, Hon’ble Minister for Handlooms and Textiles emphasized on the importance of fish culture in enhancing the livelihood of the rural population in his Chief Guest address. He appealed to the researchers to take up studies in farmers’ field to understand various issues, including the eradication of predatory fishes. Further, he released the souvenir and CD on the topic “Scaling Solutions for fair trade in Aquaculture” which was received by Prof. S. Felix, Vice-Chancellor, TNJFU, Nagapattinam. Mr. R. Palanikumar, District Revenue Officer, Nagapattinam in his felicitation address insisted on the development of Trout aquaculture in hilly regions. Prof. S. Felix, Vice-Chancellor, TNJFU, Nagapattinam presided over the function and started the session by delivering a lecture on “A careful thought on fish consumption in India” in which he explained about the present food consumption pattern in India and the role of fish in fulfilling the protein needs of people in India. He stressed on the increase in fish production to cater to the needs of rising population, which would demand high fish proteins in the future. To show a scenario on India Aquaculture production a session was handled by Dr. S. Kandan, Project Director, RGCA, Sirkazhi in which he projected the strength of Indian aquaculture in the global culture fisheries. Mr. V.R. Mansingh, Assistant Vice President, CP Aquaculture (India) Pvt Ltd, Chennai threw light on the potential investment arenas in aquaculture and explained the uniqueness of shrimp farming in both technical and commercial basis. In order to make fish/shrimp farming more profitable, strategies to improve aquaculture trade which is inevitable was shared by Mr. C. Wilson, Deputy Director, MPEDA, Nagapattinam. However, the emerging challenges in aquaculture trade should be troubleshot as it hinders the development of seafood business which was explained by Mr.R.Yathavamoorthi, Assistant Director, EIA, Nellore. Mr. S. Kalugasalamurthy, an industrialist from Chennai dealt on the retailing of farmed shrimps in India. Dr.P.Jawahar, Controller of Examinations welcomed the gathering and Dr. M. Rajakumar, Director of Extension Education delivered the vote of thanks .More than 150 fish farmers and stakeholders from in and around Nagapattinam district attended the workshop.

சோழா அக்வா-2020 நீர்வாழ் உயிரின வளர்ப்பில் சிறந்த வர்த்தகத்திற்கான தீர்வுகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 29.02.2020 அன்று இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது.

சோழா அக்வா-2020 நீர்வாழ் உயிரின வளர்ப்பில் சிறந்த வர்த்தகத்திற்கான தீர்வுகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 29.02.2020 அன்று இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் அவர்கள், ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதலில் மீன் வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அனைத்து பங்கேற்பாளர்களையும் மீன் வளர்ப்பில் படும்படி கூறினார். மேலும், அவர் இந்திய மக்களின் புரதத்தேவையை பூர்த்தி செய்வதில் மீனின் தேவை அதிகரிக்கும் பொருட்டு மீன் வளர்ப்பை அதிகரிக்க வேண்டும் என்றார். பண்ணைக்குட்டைகளில் மீன் உற்பத்திக்கு தடையாக இருக்கும் சூரையாடும் மீன்களை ஒழிப்பதற்கான கள ஆய்வினை மேற்கொள்ளுமாறு கருத்தரங்கிற்கு வருகை தந்த வல்லுனர்களை கேட்டுக்கொண்டார். மேலும் அவர் இக்கருத்தரங்கின் பயிலரங்க கையேடை சோழா அக்வா-2020 நீர்வாழ் உயிரின வளர்ப்பில் சிறந்த வர்த்தகம் என்ற தலைப்பில் புத்தகமாகவும், குறுந்தகடுகளாகவும் வெளியிட பல்கலைக்கழக துணைவேந்தர் பெற்றுக்கொண்டார். இக்கருத்தரங்கில் வாழ்த்துரையாற்றிய நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஆர். பழனிகுமார் அவர்கள், தமிழக மலைப்பகுதிகளில் குளிர்ப்பிரதேச மீனான டிரவுட் மீன் வளர்ப்பினை மேம்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுக.பெலிக்ஸ் அவர்கள் இக்கருத்தரங்கிற்கு தலைமை வகித்து  இந்தியாவில் மீன் நுகர்வு ஒரு கண்ணோட்டம்  என்ற தலைப்பில் விரிவுரையாற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

இந்தியாவில் மீன் வளர்ப்பின் தற்போதைய நிலையை சீர்காழி, ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத்தின் திட்ட இயக்குநர் முனைவர் எஸ். கந்தன் அவர்கள் எடுத்துரைத்து உலக மீன் வளர்ப்பில் இந்தியா பெரும் பங்களிப்பதாக கூறினார். திரு.ஹ.ளு. மான்சிங், உதவி துணை முதல்வர், சி.பி. அக்வாகல்ச்சர் (இந்தியா) பி. லிட்., சென்னை அவர்கள் இறால் வளர்ப்பில் எவ்வாறு முதலீடு செய்வது என்பதைக் கூறி இறால் வளர்ப்பின் தனித்துவத்தை தொழில்நுட்ப ரீதியாகவும் மற்றும் வர்த்தக ரீதியாகவும் விளக்கினார். மீன் மற்றும் இறால் வளர்ப்பை இலாபகரமாக மேற்கொள்ளும் நவீன யுத்திகளை திரு.ஊ. வில்சன், இணை இயக்குனர், கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், நாகப்பட்டினம் அவர்கள் எடுத்துரைத்தார். மீன் வளர்ப்பு
வர்த்தகத்தில் ஏற்படும் இடையூறுகளை சரிசெய்து கடல் உணவு வர்த்தகத்தில் வெற்றிவாகை சூடும் வழிமுறைகளை திரு.ஆர். யாதவமூர்த்தி, துணை இயக்குனர், ஏற்றுமதி கண்காணிப்பு நிறுவனம், நெல்லூர் அவர்கள் கற்பித்தார். வளர்ப்பு இறால்களின் சில்லறை விற்பனைபற்றி திரு.எஸ்.கழுகாசலமூர்த்தி தொழிலதிபர் அவர்கள் விரிவுரைத்தார். இப்பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், முனைவர் பா. ஜவஹர் அவர்கள் பங்கேற்பாளர்களை வரவேற்றார். பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குனர், முனைவர் மா. ராஜகுமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இக்கருத்தரங்கில் நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள 150-க்கும் மேற்பட்ட மீன் வளர்ப்போர் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.