"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

04365 - 241444


மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறால் பண்ணை உதவியாளர் செயல்திறன் வளர்ப்பு சான்றிழ் பயிற்சி

தமிழ்நாடு மீன்வளபல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் தருவைகுளம் கடற்சார் நீர் வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் “இறால் பண்ணை உதவியாளர் செயல்திறன் வளர்ப்பு சான்றிழ் பயிற்சி” பற்றிய ஒரு மாதகால பயிற்சி 22.05.2017 முதல் 20.06.2017 வரை நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மற்றும் சென்னை மாவட்டத்தை சார்ந்த 3 பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இப்பயிற்சியில் இறால் வளர்ப்பு பண்ணைத்தொழில்நுட்பம் குறித்த விளக்கப்பாடங்களும், செயல் விளக்கங்களும் அளிக்கப்பட்டது. ஒரு மாத கால பயிற்சியில், முதல் ஏழு நாட்கள் பாட வகுப்புகளும், மீதமுள்ள 21 நாட்கள் பண்ணைகளில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சியின் இறுதியாக பயிற்சியாளர்களுக்கு தோர்வு நடத்தப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் கோ.சுகுமார் அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் தனது உரையில் இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், பொருளாதாரத்தில் நலிந்த கடலோர மீனவ சமுதாயத்திற்கு இப்பயிற்சியால் ஏற்படும் மாற்று தொழில்கள் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்று எடுத்துரைத்தார். இப்பயிற்சியின் மூலம் மீனவ சமுதாயம், சுயதொழில் தொடங்குவதற்கான வழிவகைகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார் முனைவர் சா.ஆதித்தன் மற்றும் திரு.விஜய் அமிர்தராஜ் ஆகியோர் இப்பயிற்சியை ஒருங்கிணைத்து விரிவாக நடத்தினார்கள். One month skill development training course on Shrimp Farming Assistant was offered by Department of Coastal Aquaculture of the Fisheries College and Research Institute, Thoothukudi from 22.05.2017. A total of 3 participants from Thoothukudi and Chennai registered for the course. During this programme, various aspects of shrimp farming along with demonstrations were taught to the participants for one week duration initially. After this exposure, all the participants were given hands on training in a progressive shrimp farm located in Thoothukudi district (Near Palayakayal) so as to gain practical knowledge in shrimp farming course. At the end of the one month duration, the participants were evaluated for the acquired skill through a written test. On the concluding day, Dr.G.Sugumar, Dean distributed the certificates to the participants and spoke on the importance of the month long skill development programme and motivated the participants to take up shrimp farming to become entrepreneurs to improve their financial status. Dr.S.Athithan and Th.K.S.Vijay Amirtharaj coordinated the above skill development programme, who could be contacted for further information on shrimp farming.