"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

மீன்வள மாலுமிக்கலைத் தொழில்நுட்பக் கல்லூரியில் 71வது குடியரசு தின விழா

தூத்துக்குடி, மீன்பிடித் துறைமுக வளாகம், மீன்வள மாலுமிக்கலைத் தொழில்நுட்ப கல்லூரியில் 71வது குடியரசு தினம் 26.01.2020 அன்று காலை 8 மணி அளவில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியானது கல்லூரி முதலாமாண்டு மாணவர்களின் அணிவகுப்புடன் துவங்கியது. கல்லூரியின் முதல்வர் கேப்டன்.செ.விசுவநாதன் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு மூவர்ணக் கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து முதல்வர் சிறப்புரையாற்றினார். இவ்வுரையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் மாணவர்களின் கடமைகள், உரிமைகள் பற்றியும், கல்லூரியின் விரிவாக்கம் மற்றும் மாணவர்களுக்கு கொடுக்கும் சிறப்புப் பயிற்சிகளான ஆளுமைத்திறன், தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் நீர் மூழ்குதல் ஆகியவற்றின் சிறப்பு பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இவ்விழாவை கல்லூரியின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திரு.கிறிஸ்துராஜா பீரிஸ் ஒருங்கிணைத்தார்.