Under the NADP scheme entitled “Kayalagam” – The Future Store for Amplification of Marketing of Diversified Fish Products in Tamil Nadu, an awareness program on Business opportunities in value added fish products was conducted at TCeSA Soorakkottai, Thanjavur on 28 th January 2020. The Co-Principal Investigator of this scheme, Dr. P. Karthickumar, Assistant Professor gave the welcome address. Dr. J. Stephen Sampathkumar, Director DCeSA, gave the presidential address on the need for the production of value added fish products that are available in the modern world. The felicitation address was given by Dr. V. Senthilkumar, Head in charge Directorate of Centre for sustainable aquaculture, Thanjavur, who spoke about the business opportunities in fish farming and value addition of fish products. Dr. P. Karthickumar further proceeded with the program on explaining the nutritional value of seafood products, scope of business opportunities in value added fishery products, marketing strategies and facilities available in established Kayalagm. Sixteen groups of SHG women’s from nine villages and entrepreneurs were attended and benefitted from this awareness program. The awareness programme was coordinated by Dr. P. Karthickumar and Balan K.
மதிப்புக்கூட்டப்பட்டமீன் பொருட்களின் தொழில் வாய்ப்புகள் குறித்த ஒருநாள் இலவச விழிப்புணர்வு பயிற்சி முகாம்
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட கயலகம் என்னும் மீன் பொருட்கள் விற்பனை நிலையம் சார்பாக தஞ்சாவூர், சூரக்கோட்டை பிரிவுசாலையில் உள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்கத்தில் மதிப்புக்கூட்டப்பட்டமீன் பொருட்களின் தொழில் வாய்ப்புகள் குறித்த ஒருநாள் இலவசப் விழிப்புணர்வு பயிற்சி முகாம் 28.01.2020 அன்று நடைப்பெற்றது. இவ் முகாமிற்கு வருகை தந்த அனைவரையும் முனைவர் ப.கார்த்திக்குமார் அவர்கள் வரவேற்றார். பயிற்சி முகாமினை பேராசிரியர் ஜா.ஸ்டீபன் சம்பத்குமார் இயக்குனர், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்ககம் அவர்கள் தொடங்கிவைத்து மீன் சார்ந்த பொருட்களின் முக்கியத்துவம் மற்றும் மீன் பொருட்களின் இன்றைய காலகட்டங்களில் உள்ள வளர்ச்சி குறித்து உரையாற்றினார். முனைவர் மற்றும் துறைத்தலைவர் பொறுப்பு வ. செந்தில்குமார் அவர்கள் மீன் வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டப்பட்டமீன் பொருட்கள் பயன்கள் பற்றி சிறப்புரையாற்றினார். பின்னர் தொடர்ந்து முனைவர் ப.கார்த்திக்குமார் அவர்கள் மதிப்புக்கூட்டப்பட்ட மீன் பொருட்களின் தொழில் வாய்ப்புகள், மீன் பொருட்களின் ஊட்டச்சத்து பயன்கள, மீன் தொழில் சார்ந்த உணவு தயாரிக்கும் முறைகள் குறித்து உரையாற்றினார். இவ் விழிப்புணர்வு பயிற்சி முகாமில் மகளிர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் (16 எண்ணிக்கை) மற்றும் தொழில் முனைவோர்கள் என மொத்தம் 62 பேர் பங்கேற்று பயனடைந்தனர். விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப.கார்த்திக்குமார் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் கி.பாலன் ஆகியோர் செய்தனர்.