TNJFU

Humanity Week - January 29th 2024

Humanity Week was observed on January 29th, 2024, at the College of Fisheries Engineering, Nagapattinam. Mr. P. Sundaravalavan, Revenue Inspector, Nagai, graced the occasion as the special guest. The event commenced with a welcoming address delivered by Miss. Bavika Sri, a second-year student. Dr. Mohammad Tanveer (Dean, i/c) delivered a speech emphasizing the significance of humanity to the students. Following the Dean’s speech, Mr. P. Sundaravalavan, Revenue Inspector, Nagai, delivered a keynote speech advising students on the importance of treating others with humanity in today’s world.

Students from the Fisheries Engineering and Energy and Environmental Engineering departments actively participated, showcasing their talents through speeches and poems on the theme “Humanity”. First and second-year students showcased dramatic performances. Subsequently, certificates and prizes were awarded to winners of essay, poetry, drawing, and speech competitions. Certificates of appreciation were also distributed to all participating students. The event concluded with a vote of thanks delivered by second-year student Miss. I.G. Sahin. The program was organised by Tamil Paravai staff Advisor Er.D. Babiyola (Assistant Professor) and Tamil Paravai Member Dr. M. Kamalakannan (Assistant Professor).

மனிதநேய வாரவிழா

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பொறியியல் கல்லூரியில் 29 ஜனவரி 2024 அன்று மனிதநேய வாரவிழாவானது கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரு பி.சுந்தரவளவன், தனி வருவாய் ஆய்வாளர், நாகை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியானது இரண்டாம் ஆண்டு மாணவி பவிகா ஸ்ரீ அவர்களின் வரவேற்பு உரையுடன் தொடங்கப்பட்டது. முனைவர். முகமது தன்வீர் முதல்வர் (பொறுப்பு)
அவர்கள் முதல்வர் உரை வழங்கினார். முதல்வர் உரையில் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தினை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். முதல்வர் உரையைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரை வழங்கப்பட்டது. இந்த சிறப்புரையில் திரு பி.சுந்தரவளவன், தனி வருவாய் ஆய்வாளர், நாகை அவர்கள் இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் எவ்வாறு எல்லா காலகட்டத்திலும் மற்றவர்களை மனிதநேயத்துடன் மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மீன்வளப் பொறியியல் மற்றும் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, “மனிதநேயம்” என்ற தலைப்பில் சொற்பொழிவுகள் மற்றும் கவிதைகள் மூலம் தங்கள்
திறமைகளை வெளிப்படுத்தினர். முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளின் விழிப்புணர்வு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து கட்டுரை, கவிதை, ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும்
பரிசுகள் வழங்கப்பட்டன.போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இறுதியாக இரண்டாம் ஆண்டு மாணவி சாஹின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியை தமிழ்ப்பேரவை கழக ஆலோசகர் த.பபியோலா (உதவிப் பேராசிரியை)மற்றும் தமிழ் பேரவை உறுப்பினர் கமலக்கண்ணன் (உதவிப் பேராசிரியர்) முன்நின்று நடத்தினர்.