"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

TNJFU

Inauguration of Aqua Feed Extrusion Mill at DIVA, Muttukadu by the Vice-Chancellor of TNJFU

An aqua feed extrusion mill was inaugurated by the Vice-Chancellor of TNJFU, Prof. S. Felix on 02.11.2019 at the Directorate of Incubation and Vocational training in Aquaculture (DIVA) premises, Muttukadu. The Vice-Chancellor was welcomed by Dr. C.B.T. Rajagopalasamy, Director i/c., DIVA, Muttukadu. In this inaugural session, floating fish feed production trial was initiated by the Vice- Chancellor. He has seen all the feed mill equipments. Dr. C.B.T. Rajagopalasamy, Director i/c., DIVA and Dr.N.Felix, Dean, IFPGS, OMR, Vaniyanchavadi explained the working principles of all the feed mill machineries. The production capacity of twin screw extruder and Pellatizer is 250 kg and 500 kg/hr. respectively. This feed mill was established under the NADP project on “Development of cost efficient feeds for enhancing freshwater fish production” with a budget outlay of Rs. 3.98 crores. The main objective of this project is to produce cost-efficient feed for benefitting the small-scale farmers of Tamil Nadu. B.Voc. Students, Teaching and Non-Teaching staff, Assistant Engineer and Feed mill workers were present during the inaugural programme. Th. C. Manavalan, Farm Technician made all arrangements for this inauguration program.

முட்டுக்காடு மீன் வளர்ப்பு காப்பகம் மற்றும் தொழில்கல்வி இயக்க க வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட மீன் குருணை உணவு கூடம் திறப்பு விழா

முட்டுக்காடு மீன் வளர்ப்பு காப்பகம் மற்றும் தொழில்கல்வி இயக்க வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மீன் குருணை உணவு கூடத்தை பேராசிரியர் சுக. பெலிக்ஸ், துணைவேந்தர், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் அவர்களால் 02.11.2019 அன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்வியக்ககத்தின் இயக்குநர் முனைவர் சி.பொ.தா. ராஜகோபால்சாமி அவர்கள் துணைவேந்தர் அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த திறப்பு விழா நிகழ்வில் துணைவேந்தர் அவர்கள் மீன் உணவு உற்பத்தியை தொடங்கி வைத்தார். மேலும் குருணை உணவு தயாரிக்கும் அனைத்து இயந்திரங்களையும் பார்வையிட்டார். முனைவர் நா. பெலிக்ஸ், முதல்வர், மீன்வள முதுநிலை பட்ட மேற்படிப்பு நிலையம், வாணியஞ்சாவடி, சென்னை மற்றும் முனைவர் சி.பொ.தா. ராஜகோபால்சாமி இயக்குநர் அவர்கள் உணவு தயாரிக்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை பற்றி தெளிவாக எடுத்துரைத்தனர். இரட்டை திருகி இயந்திரம் மற்றும் இறால் உணவு தயாரிக்கும் இயந்திரங்களின் உற்பத்தி திறன் ஒரு மணி நேரத்திற்க்கு சுமார் 250 கி.கி மற்றும் 500 கி.கி. ஆகும். ரூ. 3.98 கோடி செலவில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டதின் நிதியுதவியுடன் நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விலை குறைந்த மீன் தீவனத்தை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டதின் முக்கிய நோக்கமாவது தமிழகத்திலுள்ள சிறு/குறு மீன் பண்ணையாளர்கள் பயன்பெரும் வகையில் விலை குறைந்த மீன் தீவனத்தை உற்பத்தி செய்து வழங்குவதேயாகும். இவ்விழாவில் உதவி பொறியாளர், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதா பணியாளர்கள் மற்றும் தீவன ஆலை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திரு. ச. மணவாளன், பண்ணை தொழில் நுட்பவியலாளர் இவ்விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டார்.

Contact Us

Directorate of Incubation and Vocational Training in Aquaculture
ECR - Muttukadu,
Kancheepuram - 603 112

044 - 2747 2118


TNJFU ranks 36th in India’s most admired Science/ Technology Universities, 54th in India’s best Public Universities and 68th in India’s Top 200 Universities.

Directorate of Incubation and Vocational Training in Aquaculture (DIVA), © 2019 | All Rights Reserved

Powered by ITAcumens