"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"
The Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), a constituent unit of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, organized an awareness cum training programme on “Responsible Fishing” for the fishermen of Kalimankundu, Tirupullani on 06.03.2019. About 30 fishermen attended the programme where Dr.G.Sugumar, Director i/c., of the DIVF inaugurated the training programme and spoke on the need for responsible fishing and possible alternative livelihood options for Fisherfolk to ease fishing pressure due to excess fishing fleets. He emphasized the need for conservation of biodiversity and optimal utilization of resources for sustainability on a long term basis. Mr.M.Kalaiarasan gave a talk on eco-friendly fishing methods and highlighted the need for phasing out gears that destroy coastal and marine ecosystems. Mr.Murugasan, Inspector of Fisheries, Ramanathapuram spoke on Government initiation in fishing methods and on welfare schemes available to fishermen. Mr.Ilaiyaraja, a post graduate of fisheries and a resident of the village helped in organizing the programme at his native village.
பொறுப்பார்ந்த மீன்பிடிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மீன்வளத் தொழில்காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகத்தின் சார்பாக மீனவர்களுக்கான பொறுப்பார்ந்த மீன்பிடிப்பு மற்றும் மாற்று வாழ்வாதாரம் குறித்த விழிப்புணர்வு பயிற்சியானது இராமநாதபுரம் மாவட்டம் களிமண்குண்டு கிராமத்தில் 06.03.2019 அன்று நடைபெற்றது. முப்பது மீனவர்கள் கலந்து கொண்டனர். இயக்குனரகத்தின் இயக்குனர் முனைவர். கோ. சுகுமார் அவர்கள் தொடங்கி வைத்து பேசும் போது பொறுப்பார்ந்த மீன்பிடிப்பு முறைகளின் தேவைகள் மற்றும் மாற்று வாழ்வாதாரம் பற்றிய சாத்தியக்கூறுகள் பற்றி எடுத்துரைத்தார்கள். மேலும் கடல்வளத்தினை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்த தொலைநோக்கு விழிப்புணர்வை வலியுறுத்தினார்;. மேலும் இயக்குனரகத்தின் உதவிப் பேராசிரியர் திரு.மு.கலையரசன் அவர்கள் பேசும்போது சுற்றுச்சூழலை பாதிக்காத மீன்பிடிக் கருவிகளை கையாளுதல் மற்றும் கடல் வளத்தை அழிக்கக்கூடிய அபாயகரமான மீன்ப்pடி முறைகளால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் எடுத்துரைத்தார். மீவளத்துறை ஆய்வாளர் திரு. முருகேசன் பேசும்போது ஆழ்கடல் மீன்பிடிப்பு முறைகளை ஊக்கப்படுத்துதல் மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்டங்களை விவரித்தார்கள். இப்பயிற்சிக்கு மீன்வளக் கல்லூரியின் முன்னாள் மாணவர் திரு. இளையராஜா அவர்கள் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை முன்னின்று சிறப்பாக செய்து கொடுத்தார்.
Institute of Industrial Fishing Technology (IIFT),
Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF),
Ariyaman Beach,
Ramanathapuram – 623 519.