"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"
The Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), Ramanathapuram one of the Constituent units of Tamil Nadu Dr.J.Jeyalalithaa Fisheries University has organized a One Week Training Program on “Deep Sea Fishing Techniques” from 11.12.2023 to 19.12.2023 with the funding of Tamil Nadu Skill Development Corporation (TNSDC), Chennai. A total of 20 fishermen from Rameswaram participated in the training program. The valedictory function was conducted at the DIVF, Ariyaman Beach, Ramanathapuram on 19.12.2023. The Assistant Director of Fisheries and Fishermen Welfare, Rameswaram, Mr. V. Abdul Kathar Jeyalani, served as chief guest. In his chief guest address, he emphasized the need for issuing licenses for boat drivers who are operating Mechanized fishing vessels along the coast of Ramanathapuram district. Mr. M. Kalaiarasan, Assistant Professor stated that the training would not only be useful for livelihood upgradation of fishermen through Deep Sea fishing but also will be of great use in reducing fishing pressure in the coastal waters. The training program included various aspects related to Deep sea fishing such as designing and fabrication of deep sea fishing gears, Deep Sea fish and squid resources, handling of navigational equipment such as GPS, Fish Finder, AIS, VHF, MF, Chart works, Navigational Signals, Rules of roads, Life Saving appliances, On-board training, Navigational Simulator, Care and maintenance of Marine Engines and Gearbox, Lathe and welding works, The scheme investigators and invited subject matter specialists conducted the training program practical demonstrations on Marine Meteorology, First aid at sea, Fire Fighting, Wild Life Act and Deep Sea Fishery Resources were carried out by a Dean, Tamil Nadu Maritime Academy, Thoothukudi, Doctor, Uchipuli, Fire officer of Tamil Nadu Fire and Rescue services, Keelakarai and Principal Scientist, CMFRI, Mandapam respectively. The staff and students had organized the function.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகம் நடத்தும் 'ஆழ்கடல் மீன்பிடித் தொழில்நுட்பங்கள்” என்ற ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியானது 11.12.2023 முதல் 19.12.2023 வரை நடைபெற்றது. இப்பயிற்சியில் இராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த 19 மீனவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டார்கள். இதன் நிறைவு விழாவானது 19.12.2023 அன்று மாலை 5.00 மணியளவில் மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகத்தில் நடைபெற்றது. திரு.வ. அப்துல் காதர் ஜெயிலானி, உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, இராமேஸ்வரம் அவர்கள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் தமது சிறப்புரையில் மீனவர்கள் படகு ஓட்டுநர் உரிமம் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கடலில் இருக்கும்போது படகு என்ஜினில் பழுது ஏற்பட்டால் மீனவர்களே பழுது நீக்குவதற்கு இப்பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும் எனவும் கூறினார். இயக்குனரகத்தின் உதவிப் பேராசிரியர் திரு. மு. கலையரசன், அவர்கள் தனது உரையில் ஆழ்கடல் மீன்பிடிப்பின் வளர்ச்சியின் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும், இந்த ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியின் போது ஆழ்கடல் பீலிக்கணவாய் மீன்பிடித் தொழில்நுட்பம், கடல்சார் மின்னனுச் சாதனங்களைக் கையாளுதல், உலகளாவிய இருப்பிடம் காட்டி (ஜி.பி.எஸ்) மற்றும் மீன் கண்டுபிடிப்பான்கள் செயல்முறை விளக்கம், மாலுமிக்கலை வரைபடங்கள், மாலுமிக்கலை ஒலிச் சமிக்கைகள் மற்றும் கடற்பயண விதிகள், ஆழ்கடல் மாலுமிக்கலை செயல்முறை விளக்கம், ஆழ்கடல் மீன்பிடிப் படகில் ஆழ்கடல் மீன்பிடி வலைகள் செயல்முறை விளக்கம், கடைசல் பனிப்பட்டறை இயந்திர செயல்முறை விளக்கம், கடலில் முதலுதவி மற்றும் கடலில் மீனவர் பாதுகாப்பு, ஆழ்கடல் வானிலை, ஆழ்கடல் செவுள் வலை மற்றும் ஆயிரங்கால் தூண்டி வடிவமைப்பு, தீயணைப்பு முறைகள் மற்றும் செயல்விளக்கம், கடல் எஞ்சின் பராமரிப்பு செயல்முறை விளக்கம், பாதுகாக்கப்பட்ட நீர்வாழ் உயிரினங்கள், ஆழ்கடல் மீன்வளம் - தற்போதைய நிலை முன்னேற்ற சாத்திய கூறுகள், நீர்உயிரின பாதுகாப்புச் சட்ட விளக்கம், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில் மீன்களைக் கையாளுதல் மற்றும் உறைபதனம் செய்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் மீனவர்களுக்கு பயன்தரும் வகையில் வழங்கப்பட்டது.
Institute of Industrial Fishing Technology (IIFT),
Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF),
Ariyaman Beach,
Ramanathapuram – 623 519.