"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Inaugural function of the One week Training Programme on "Deep Sea Fishing" from 20 th – 25 th September, 2021

DIVF News
DIVF News

The Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), a constituent unit of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University is organizing a one week on campus training programme on “Deep Sea Fishing from 20.9.2021 to 25.9.2021”. The inaugural function of the training programme was conducted on 20.09.2021 at DIVF, Ramanathapuram and a total of 20 fishermen from various parts of Ramanathapuram district participated in the programme. Mr.M.Kalaiarasan, Assistant Professor, DIVF, Ramanathapuram welcomed the gathering. Mr. E.Kathavarayan, Deputy Director of Fisheries, Ramanathapuram participated as Chief guest and graced the occasion. In his Chief guest address, the Deputy Director emphasized the need for fishermen to take up technical training on deep sea fishing to update their knowledge on safety at sea besides marine Engine operation and maintenance. Dr. N. Neethiselvan, Director, DIVF, Ramanathapuram presided over the function. In his presidential address, he explained the role of DIVF in imparting training to fishermen on aspects such as Navigational Chart work, Navigational equipments and Engine maintenance. Capt. S. Viswanathan , Dean, College of Nautical Science, Thoothukudi and Dr. M. Kathiresan, Assistant Director (Deep sea fishing), Ramanathapuram delivered felicitation addresses. Er.R.Regupathy, Assistant Professor delivered the vote of thanks.

The training programme would include various aspects related to Deep sea fishing such as designing and fabrication of deep sea fishing gears, handling of navigational equipments, seamanship appliances, marine engine repair and maintenance, responsible fishing methods and hygienic handling of fishes onboard the fishing vessel. Teaching Staff of this institute and invited Subject matter specialists would conduct the training with practical demonstrations.


"ஆழ்கடல் மீன்பிடித்தொழில் நுட்பங்கள்” என்ற ஒரு வார உள்வாகப் பயிற்சியின் துவக்க விழா

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகம் நடத்தும் “ஆழ்கடல் மீன்பிடித் தொழில்நுட்பங்கள்” என்ற ஒரு வார உள்வளாகப் பயிற்சியின் துவக்க விழாவானது 20.09.2021 அன்று காலை 10.00 மணியளவில் இராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் உள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர், இராமநாதபுரம் மாவட்டம் திரு.ஏ.காத்தவராயன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் தமது சிறப்புரையில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளின் பிரச்சனைகள் ஏதுமின்றி இயக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் எஞ்சினுக்கான தொடர் பராமரிப்பு முறைகளின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 22 ஆழ்கடல் மீன்பிடிக்கும் மீனவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டார்கள். இவ்வியக்குனரகத்தின் இயக்குநர், முனைவர் நீ.நீதிச்செல்வன் தலைமையுரை ஆற்றினார். இந்த ஒரு வார உள்வளாகப் பயிற்சியின் போது கடல்சார் மின்னணுச் சாதனங்களைக் கையாளுதல், கடலில் முதலுதவி மற்றும் கடலில் மீனவர் பாதுகாப்பு, ஆழ்கடல் தொடர்பான கடல் வானிலை, மாலுமிக்கலை வரைபடங்கள், ஆழ்கடல் செவுள் வலை மற்றும் ஆயிரங்கால் தூண்டி வடிவமைப்பு மற்றும் புனைதல், மாலுமிக்கலை ஒலிச் சமிக்கைகள் மற்றும் கடல் சாலை விதிகள், தீயணைப்பான் முறைகள் மற்றும் செயல்பாடுகள், கடல்சார் முதலுதவி, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில் மீன்களைக் கையாளுதல் மற்றும் உறைபதனம் செய்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார். இவ்வியக்குனரகத்தின் உதவிப் பேராசிரியர் திரு.மு.கலையரசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் (ஆழ்கடல்) முனைவர் எம்.கதிரேசன் அவர்கள் தமது வாழ்த்துரையில் மீன்பிடிப்படகுகளில் இருக்க வேண்டிய கடல் பாதுகாப்புச் சாதனங்களின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் தூத்துக்குடி மீன்வள மாலுமிக்கலைத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கேப்டன் செ.விஸ்வநாதன் அவர்கள் மாலுமிக்கலைச் சாதனங்களைக் கையாளுதல் உயிர்காப்புச் சாதனங்களைக் கையாளுதல் பற்றி விரிவாக உரையாற்றினார். விழாவின் இறுதியாக இவ்வியக்குனரகத்தின் உதவிப் பேராசிரியர் பொறியாளர் ரெ.ரெகுபதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.