Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

Awareness programme on culture of native ornamental fishes inaugurated by Hon'ble Minister of Fisheries

Hon’ble Minister for Fisheries – Fishermen Welfare and Animal Husbandry, Thiru Anitha R. Radhakrishnan inaugurated an one day awareness programme on culture of native ornamental fishes at Dr. M.G.R Fisheries College and Research Institute, Ponneri on 29.06.22. The programme was inaugurated in the presence of Thiru. Durai Chandrasekar, MLA of Ponneri, Thiru.T.J.Govindharajan, MLA of Gummidipoondi and senior officials of Tamil Nadu Fisheries and Fishermen Welfare Department. Dean i/c of Dr. M.G.R Fisheries College and Research Institute, Dr. B. Ahilan welcomed the gathering. In the inaugural address, the Hon’ble Minsiter of Fisheries, stressed on the importance of promoting native ornamental fishes instead of relying the imported ornamental fish varieties and appreciated the institute for organizing such need of the hour awareness programme. The inaugural ceremony was attended by the faculty, staff and students of the institute. Following the inaugural ceremony, faculty of the institute briefed about the importance and culture aspects of native ornamental fishes which was attended by 30 ornamental fish farmers from Ponneri region. Later, the Hon’ble Minister of Fisheries visited the various facilities of the institute and released GIFT seeds in the newly constructed farm complex.

 

நம்நாட்டு இன வண்ணமீன்களின் உற்பத்தி குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்

பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 29.06.2022 அன்று நடைப்பெற்ற நம்நாட்டு இன வண்ணமீன்களின் உற்பத்தி குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், திரு. டி.ஜே. கோவிந்தராஜன் மற்றும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையை சார்ந்த மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர். ப. அகிலன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கான வரவேற்புரையை வழங்கினார். தனது துவக்க உரையில், மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நம்நாட்டு இன வண்ணமீன் இனங்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்துவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்வை நடத்தும் கல்லூரியையும் பாராட்டினார். இந்நிகழ்வின் துவக்க நிகழ்ச்சியில் கல்லூரியின் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். கல்லூரியின் பேராசிரியர்கள் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்னேரி வட்டத்தை சார்ந்த 30 வண்ணமீன் பண்ணையாளர்களுக்கு பயனளிக்கும் விதமாக நம்நாட்டு இன வண்ணமீன்களின் உற்பத்தியை குறித்த தொழில்நுட்ப உரைகளை வழங்கினார்கள். பின்னர், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கல்லூரியின் வசதிகளை பார்வையிட்டு, புதிதாக அமைக்கப்பட்ட பண்ணை வளாகத்தில் கிஃப்ட் திலேப்பியா மீன் குஞ்சுகளை வெளியிட்டார்.

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in