Latest News:

70 th Republic Day Celebration at Fisheries College and Research Institute, Thoothukudi

Fisheries College and Research Institute, Thoothukudi, a constitute college of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam celebrated the 70 th Republic Day in a grand manner. The students and staff of Fisheries College and Research Institute, Thoothukudi participated in the programme. The Dean i/c. Dr.P. Velayutham was escorted to the Dais by the Security Staff Commander and the Students’ Captain along with Physical Director Dr.D.Natarajan and Dr. K. Veerabhadran, Vice-President of Student Association. A guard of honour was performed by the Security Staff and the students. Dr.P. Velayutham, Dean i/c. unfurled the National Flag and the College staff, students and Security personnel honoured the National Flag. In this republic day address, he spoke on the history and importance of India becoming a republic and the schemes launched by Indian Government to take our nation on a progressive path. He reminded the role to be played by all true citizens of the Nation in executing our democratic rights. On this occasion, Dr.P. Velayutham, the Dean i/c. presented the Best Teacher Award to Dr.R.Jeya Shakila, Professor and Head and Mrs.R.Shalini, Assistant Professor Th. U. Arisekar received the Best Teaching Assistant Award. The Best Workers awards given to Mrs. G. Booma and Th. K. Titus Mohan. The Best Contractual worker award was received by Th. A. Chandrasekaran. The Best Students award received by Selvi.S.Deepika, II Ph.D., Selvi.A. Brita Nicy, III Ph.D., Selvi. M.Muthu Abisha, II M.F.Sc, Selvi. N.N. Naga Kalphitha Shree, II B.F.Sc., Selvi.S. Thanga Anusya, III B.F.Sc., Selvi.K.Shasti Risha, IV B.F.Sc..

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 70வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 70வது குடியரசு தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இக்கல்லூரியின் மாணவ-மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவிற்கு மாணவர் சங்கத் துணைத்தலைவர் முனைவர் மு.வீரபத்திரன் மற்றும் உதவி உடற்கல்வி இயக்குநர் முனைவர் த.நடராஜன் அவர்களுடன் பாதுகாப்பு கமாண்டர் மற்றும் மாணவர் தலைவர் அவர்கள் இக்கல்லூரியின் முதல்வர் அவர்களை விழா மேடைக்கு அழைத்து வந்தனர். பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை நிகழ்த்தினர். கல்லூரியின் முதல்வர்(பொ) முனைவர்.ப.வேலாயுதம் அவர்கள் நமது தேசிய கொடியை ஏற்றினார் மற்றும் கல்லூரியின் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அணிவகுப்பு நடத்தி தேசிய கொடிக்கு மரியாதையுடன் வணக்கம் செலுத்தினர். பின்னர் ஆற்றிய குடியரசு தின உரையில் இந்தியா குடியரசான வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டினார். இந்திய முன்னேற்றத்திற்கான அரசுத்திட்டங்களை பட்டியலிட்டு, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். மேலும் தனது உரையில் குடியரசு தினம் கொண்டாடும் இந்நாளில் உழைத்த அனைத்து தலைவர்களையும்; நினைவு கூர்ந்தார். இவ்விழாவில் 2018ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியராக முனைவர் ஆர்.ஜெயஷகிலா, பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் மற்றும் திருமதி ஆர்.ஷாலினி உதவிப் பேராசிரியர் அவர்களுக்கு சான்றிதழ்கள்; வழங்கப்பட்டன.சிறந்த பணியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.கே.டைற்றஸ் மோகன், திருமதி கோ.பூமா மற்றும் ஒப்பந்த பணியாளர் திரு.யு. சந்திரசேகரன் ஆகியோர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் செல்வி.ளு.தீபிகாரூபவ்ஐஐ பி.எச்.டி, செல்வி.யு.பிரிட்டா நைஸி, ஐஐஐ பி.எச்.டி.இ செல்வி. முத்து அபிஷா, இரண்டாமாண்டு முதுநிலை, செல்வி. N. நாக கல்பிதா ஸ்ரீ, இரண்டாம் ஆண்டு இளநிலை, செல்வி. ளு.தங்க அனுஷியா, மூன்றாமாண்டு இளநிலை, செல்வி. ஷஸ்தி ரிஷா,நான்காமாண்டு இளநிலை, ஆகியோருக்கு வழங்கப்பட்டன.