Latest News:

71st Republic Day Celebration at Fisheries College and Research Institute, Thoothukudi

Fisheries College and Research Institute, Thoothukudi, a constitute college of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam celebrated the 71st Republic Day in a grand manner. The students and staff of College participated in the programme. The Dean, Dr.B.Sundaramoorthi, was escorted to the Dais by the Security Staff Commander and the Students’ Captain along with Sports Secretary Mr.F.Parthiban. A guard of honour was performed by the Security Staff and the students. The Dean unfurled the National Flag and the College staff, students and Security personnel honoured the National Flag. In this republic day address, he spoke on the history and importance of India becoming a republic and achievement made in IT, space and Food Production. He reminded the role to be played by all true citizens of the Nation in executing our democratic rights. On this occasion, the Dean presented the Best Worker Awards to Mr. S. Senthurpandi among D group employees and Mr.V. Santhana Sankar among C group employees. Dr. V. Rani, Assistant Professor and Head received the Best Teacher Award as judged by a committee constituted by the University for his best performance during the year 2019.

 

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 71வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தமிழ்நாடு மீன்வளப் பல்  கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 71வது குடியரசு தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இக்கல்லூரியின் மாணவ-மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவிற்கு விளையாட்டு செயலர் திரு.ப.பார்த்திபன் பாதுகாப்பு கமாண்டர் மாணவர்கள் அவர்கள் இக்கல்லூரியின் முதல்வர் அவர்களை விழா மேடைக்கு அழைத்து வந்தனர். பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை நிகழ்த்தினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.சுந்தரமூர்த்தி அவர்கள் நமது தேசிய கொடியை ஏற்றினார் மற்றும் கல்லூரியின் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அணிவகுப்பு நடத்தி தேசிய கொடிக்கு மரியாதையுடன் வணக்கம் செலுத்தினர். பின்னர் ஆற்றிய குடியரசு தின உரையில் இந்தியா குடியரசான வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டினார். இந்திய முன்னேற்றத்திற்கான வளர்ச்சித்திட்டங்களை பட்டியலிட்டு, மற்றும் சாதனைகளை நினைவூட்டி இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். மேலும் தனது உரையில் சுதந்திர தினம் கொண்டாடும் இந்நாளில் உழைத்த அனைத்து தலைவர்களையும் நினைவு கூர்ந்தார். இவ்விழாவில் 2019ம் ஆண்டிற்கான சிறந்த பணியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.எஸ்.செந்தூர்பாண்டி மற்றும் திரு.வி. சந்தான சங்கர் ஆகியோர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த ஆசிரியராக மாணவ-மாணவிகள் மற்றும் பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட தேர்வு குழு ஆகியோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர்.வி.ராணி, உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்க பணமும் வழங்கப்பட்டன.