Latest News:

Participation in the Career Counselling Workshop Organized by District, Administration, Thoothukudi

A workshop on Career Counselling was organized on 01.02.2020 for school students by the District Administration at the District Collectorate, Thoothukudi. Dr. R. Santhakumar, professor has delivered a lecture on Professional and Paraprofessional courses offered by Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University. Dr. B. Chrisolite, Assistant Professor, distributed the flyer on the courses offered by Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University to the students participated under the Project New Wings, Thoothukudi. Mr. Sandeep Nanduri, IAS, District Collector delivered welcome and introduction speech. Experts of other organizations have also delivered Career Counselling Speech. About 200 students of higher secondary level participated in this event.

 

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நடத்திய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கில் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் புதிய சிறகுகள் என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் என்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 01.02.2020 அன்று நடத்தியது. இதில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக முனைவர் இரா. சாந்தகுமார், பேராசிரியர் மற்றும் முனைவர் பி. கிறிசோலைட், உதவிப்பேராசிரியர் சிறப்பு அழைப்பாளார்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப. வரவேற்புரை மற்றும் தொடக்க உரை ஆற்றினார். முனைவர் இரா. சாந்தகுமார், பேராசிரியர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வழங்கும் மீன்வளப் பட்டபடிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகள் என்ற தலைப்பில் உரை வழங்கினார். முனைவர் பி. கிறிசோலைட், உதவிப்பேராசிரியர் மீன்வளப்படிப்புகள் பற்றிய பிரசுரங்களை மாணவர்க்கு வழங்கினார். ஏறத்தாழ 200 மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிறதுறையைச் சார்ந்த வல்லுனர்களும் தொழில் வழிகாட்டுதலில் உரைகளை வழங்கினார்கள்.