Fisheries College & Research Institute, Thoothukudi is one of the constituent units under Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University organized an Awareness Programme for the benefit of fish farmers, fisheries entrepreneurs, rural folk, aqua industries personnel and school students in connection with “National Fish Farmers Day Celebration” on 11.07.2022 between 10.30 am and 1.15 pm. A total of 93 participants including fish farmers, fisheries entrepreneurs, rural folk, aqua industries personnel and school students from Thoothukudi district were attended.
The National Fish Farmers day has been organized every year to mark the technological development of induced breeding of Indian major carps using carp pituitary extracts by Dr.Hiralal Chaudhery with the support of Dr.K.H.Alikunhi in the year 1957, which has led to organized freshwater fish farming in the country. During the inaugural function, Dr.Betsy has welcomed the gatherings. Dr.S.Athithan, Professor & Head, Dept. of Aquaculture has delivered a note on national fish farmers day.
Dr.R.Santhakumar, Dean i/c has delivered the presidential address and highlighted the importance of celebrationg the national fish farmers day every year. Th.Anix Vivek Santhiya proposed vote of thanks.
After inaugural programme, Dr.S.Athithan, Professor & Head, Dept. of Aquaculture a delivered talk on present status of aquaculture in India, how to obtain Kissan credit card by aquaculturist, schemes & services under PMMSY scheme and how to get loan from commercialized / nationalized banks.
Dr.S.Athithan, Professor & Head of this college coordinated the event.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தூத்துக்குடி மீன்வளர்ப்பாளர்கள் மீன்பிடி தொழில் முனைவோர் கிராமப்புற மக்கள் நீர்வாழ் தொழில்துறை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலனுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. தேசிய மீன்வளர்ப்போர் தின விழா” 11.07.2022 அன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.15 மணி வரை கொண்டாடப்பட்டது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீன் பண்ணையாளர்கள் மீன்பிடி தொழில்முனைவோர் கிராமப்புற மக்கள் நீர்வளத் தொழில்துறையினர் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 93 பேர் கலந்து கொண்டனர். தேசிய மீன்வளர்ப்போர் தினமானது வருடந்தோறும் ஜீலை மாதம் 10-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்திய கெண்டை மீன்களில் தூண்டும் முறை இனப்பெருக்க தொழில்நுட்பத்தை கண்டறிந்த விஞ்ஞானிகளான பேராசிரியர்கள் ஹிராலால் சௌத்ரி மற்றும் அலிகுன்கி ஆகியோரின் நினைவாக தேசிய மீன்வளர்ப்போர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் நோக்கமானது மீன்வளர்ப்போரிடையில்; வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உற்பத்தியில் உள்ள தற்போதைய நிலையைவிட மீன் உற்பத்தியை மேலும் அதிகரிக்க செய்வதற்காகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் முனைவர் ஜீடித் பெட்ஸி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மீன்வளர்ப்புத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சா. ஆதித்தன்; தேசிய மீன்வளர்ப்போர் தினம் குறித்த குறிப்பை வழங்கினார். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொ) முனைவர் ரா. சாந்தகுமார் அவர்கள் நமது நாட்டில் உள்ள மீன்வளர்ப்பிற்கான நீhவள ஆதாரங்களின் இருப்பளவு நன்னீர் மீன்வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் உற்பத்தி குறித்தும் அதன் தேவைகள் குறித்தும் தலைமையுரை ஆற்றினார். இறுதியாக உதவிப் பேராசிரியர் திரு. அனிக்ஸ் விவேக் சந்தியா அவர்கள் நன்றிiயுரை ஆற்றினார்.
துவக்க விழா நிகழ்வைத் தொடர்ந்து மீன் வளர்ப்பு துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சா. ஆதித்தன் அவர்கள் இந்தியாவின் தற்போதைய மீன் வளர்ப்பு நிலை மீன் வளர்ப்பாளர் கிசான் கிரெடிட் கார்டை எவ்வாறு பெறுவது Pஆஆளுலு திட்டத்தின் கீழ் திட்டங்கள் மற்றும் சேவைகள் மற்றும் வணிகமையமாக்கப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன்பெறுவது எப்படி பற்றிய விளக்கவுரை ஆற்றினர்.
முனைவர் சா. ஆதித்தன் பேராசிரியர் மற்றும் தலைவர் மீன்வளர்ப்புத்துறை இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விரிவாக செய்திருந்தார்.