Department of Aquaculture functioning under the Fisheries College and Research Institute, Tamil Nadu Dr. J.Jayalalithaa Fisheries University offered one day training programme on “Integrated Fish Culture” on 25.01.2023 with the funding support of National Agriculture Development Programme scheme. A total of 31 trainees from Tirunelveli & Tenkasi district participated successfully.
During this programme, various aspects in integrated fish culture were taught to the participants. Video show on integrated fish culture was also arranged to the trainees. After this exposure, all the participants were visited to integrated fish farm complex at this campus. Dr.B.Ahilan, Dean distributed the certificates and interacted with the participants and stressed the importance of integrated fish culture as a livelihood option to improve one’s financial status. Dr.S.Athithan, Professor and Head of Department of Aquaculture conducted & coordinated the entire training programme.
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு குறித்த ஒரு நாள் நேரடி இலவச பயிற்;சி நடைபெற்றது
தமிழ் நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான மீன் வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின்; கீழ் இயங்கி வரும் மீன் வளர்ப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்ட நிதியுதவியுடன்; ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் நேரடி பயிற்சி 25.01.2023 அன்று காலை 9.00 மணி முதல் மாலை; 5 மணி வரை வழங்க பட்டது. இதில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த 30 பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் பல்வேறு அம்சங்கள் பங்கேற்பாளர்களுக்கு கற்பிக்கப்பட்டன. பயிற்சியாளர்களுக்கு ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு குறித்த காணொளி காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வெளிப்பாட்டிற்குப் பிறகு அனைத்து பங்கேற்பாளர்களும் இந்த வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன் பண்ணை வளாகத்திற்குச் 30 பயனாளிகள் அழைத்து செல்லப்பட்டனர். இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் ப. அகிலன் அவர்கள் பயிற்சியில கலந்து கொண்ட பயனாளிக்கு சான்றிதழ் வழங்கி பொருளாதாரத்தில் நலிந்த மீனவ சமுதாயத்திற்கு இது போன்ற மாற்று தொழில்கள் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்று எடுத்துரைத்தார்.
மேலும், இப்பயிற்சியின் மூலம் சுய தொழில் தொடங்குவதற்கான வழி வகைகள் குறித்து துறை பேராசிரியர் மற்றும் தலைவருமான முனைவர் சா.ஆதித்தன் விரிவாக எடுத்து கூறி பயிற்சியை நடத்தினார்.