The NSS unit of Fisheries College and Research Institute, Thoothukudi, conducted a "Leprosy Awareness Camp" on the occasion of Gandhiji's 75 th death anniversary. The initiative was led by Dr. B. Ahialn, Dean of the college and he emphasized the importance of such a programme in his presidential address. Dr. P. Yamuna, the District's Deputy Director of Medical Services for Leprosy, spoke in-depth about leprosy and other skin illnesses and Mr. Muthukumar, a Health Educator, gave a speech on the rehabilitation of leprosy patients. The programme was also attended by Mr. Mathivanan, Non-Medical Supervisor, Primary Health Centre, Pudukootai, as well as other employees from the District Health Office. All necessary arrangements for the Camp were made and the event was coordinated by the NSS Programme Officer, Mr. M. Muruganantham and the NSS Secretary, Mr. M. Santhoshkumar. A total of 230 faculty members and students benefited from the programme.
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நாட்டுநலப் பணித்திட்டத்தின் சார்பாக ‘தொழுநோய் விழிப்புணர்வு முகாம்’ 09.02.2023 அன்று நடைபெற்றது
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு 09.02.2023 அன்று காலை ‘தொழுநோய் விழிப்புணர்வு முகாம்’ நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. அகிலன் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைப்படி நிகழ்ச்சி நடந்தேறியது. முதல்வர் அவர்கள் தலைமையுரையின்போது நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தூத்துக்குடி மாவட்ட மருந்துவப் பணிகள் (தொழுநோய்) துணை இயக்குநர் டாக்டர் பி. யமுனா ‘தொழுநோய் மற்றும் பிற தோல் நோய்கள’; குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ‘தொழுநோயாளியின் மறுவாழ்வு’ என்ற தலைப்பில் சுகாதாரக் கல்வியாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் உரை நிகழ்த்தினார். திரு.மதிவாணன் மருத்துவம் சாராத மேற்பார்வையாளர் ஆரம்ப சுகாதார நிலையம் புதுக்கோட்டை மற்றும் மாவட்ட சுகாதார அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு. மு. முருகானந்தம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட செயலாளர் திரு. எம் சந்தோஸ்குமார் ஆகியோர் முகாமிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்ச்சி மூலம் 230 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பயனடைந்தனர்.