The Physical education unit of TNJFU- Fisheries College and Research Institute, Thoothukudi celebrated the 9 th International Yoga Day on 21.06.2023. Dr.N. V. Sujathkumar, Dean i/c, Fisheries College and Research Institute, Thoothukudi presided over the function. During his presidential address, he explained origin of yoga in India and remembered the contribution of our Honorable Prime Minister ShriNarendraModi to bring to International Yoga Day during 2014. The Fisheries College and Research Institute, Thoothukudi is also giving Yoga training to the staff and students twice in a week as extra curriculum. He was also urged the staff and students to practice yoga regularly. A special lecture on value of Yoga in current Life style was given by Mr.K.Parthasarathi, Yoga Master, Five Element Yoga Reactive Therapy, Thoothukudi. He explained to practice most important Asanas and Muthras in everyday life. There are more than 200 Nos.of staffs and students of this Institute attended and practice common yoga protocol on the occasion. The 5 Yoga masters of Ganesh Nagar Sky yoga centre, Five Element Yoga Reactive Therapy, Thoothukudi were honoured with mementos. Dr. F. Parthiban, Assistant Professor and Sports Secretary delivered the welcome address and offered the vote of thanks. Dr. D. Natarajan, Assistant Director Physical Education made arrangements for the events.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 9வது உலகளாவிய யோகா தினமானது 2023ம் ஆண்டு ஐ_ன் 21ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர். ந.வ. சுஜாத்குமார் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இந்தியாவில் உருவாகிய யோகா கலைகளையும் அதனை உலகளாவிய கலைகளாக்க நமது பாரத பிரதமர் 2014ம் ஆண்டிலிருந்து ஆற்றிய பங்கு குறித்தும் நினைவுபடுத்தினார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வாரத்திற்கு இரண்டு முறை ஆசிரியர்கள் மற்றும் மாணக்கர்க்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் இதில் பங்குபெற்று உடல் நலம் மேன்மை பெற வேண்டுகோள் விடுத்தார். தூத்துக்குடியில் உள்ள ஐம்புலன் யோகாகலை குருவான திரு. கா. பார்த்தசாரதி அவர்கள் தற்போதைய வாழ்வு முறையில் யோகா கலையின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும் தற்போதைய வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான யோகாசனங்களை பற்றி விரிவாக விளக்கி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 200 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள். இந்த விழாவில் கனோஷ் நகர் விண் யோகா கலை நிறுவனம் மற்றும் ஐம்புலன் யோகா கலை நிறுவனங்களில் உள்ள ஐந்து யோகா கலை ஆசிரியர்கள் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இந்த விழாவிற்கான வரவேற்புரை மற்றும் நன்றியுரையை முனைவர். பா. பார்த்திபன் உதவிபேராசிரியர் மற்றும் விளையாட்டு செயலாளர் நிகழ்த்தினர். விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் முனைவர். நடராஜன் உதவி உடற்பயிற்சி இயக்குனர் செய்து இருந்தார்.