A Special programme on “Ten tips to improve Self Confidence” was organized for the II & III B.F.Sc. students at the Fisheries College and Research Institute, Thoothukudi on 11.10.2018. Mr.R. Veerapathiran, Pearl City Academy on Leadership and Management Skills (PALMS), Thoothukudi was the trainer, who conducted a very useful and interactive session on basic methods of improving self-confidence and work efficiency much to the appreciation of all participants. Dr.G.Sugumar, Dean of the Fisheries College and Research Institute, Thoothukudi presided over the programme. The II and III B.F.Sc. Students participated in the special programme. Dr. S. Athithan and Dr. P. Padmavathy, Student’s Coordinators, Fisheries College and Research Institute coordinated the programme.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகளுக்கு மென்திறன் பயிற்சி
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு “தன்னம்பிக்கையை மேம்படுத்த பத்து குறிப்புகள்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி 11.10.2018 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மீன்வளக் கல்லூரியின் முதல்வர் முனைவர். கோ. சுகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். தூத்துக்குடியில் உள்ள பார்ம்ஸ் நிறுவனத்தின் மூலம் திரு. சு. வீரபத்திரன் அவர்கள் பயிற்றுனராக கலந்து கொண்டார். மாணவர்கள் அனைவரும் தங்களின் தன்னம்பிக்கையை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்ற விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட மாணவர்கள் முழு ஆர்வத்துடன் பங்கு கொண்டு பயிற்சி மிகவும் பயனுள்ளதாய் இருந்ததாய் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் இளநிலை இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியினை முனைவர். சா. ஆதித்தன், மற்றும் முனைவர். பா.பத்மாவதி, மாணவ ஒருங்கிணைப்பாளாகள் ஒருங்கிணைத்தனர்.