Fisheries College and Research Institute, Thoothukudi organized a Training. programme on "Freshwater fish culture" on 30.12.2024. This programme was organized by the Department of Fisheries Extension, Economics and Statistics of this institute in collaboration with TVS Srinivasan Services Trust, Srivaikundam, Thoothukudi. Dr. N. Neethiselvan, Dean i/c, FC&RI, Thoothukudi inaugurated the programme. Training programs covered the topics such as commercially important freshwater fishes, freshwater fish pond preparation, equipment and infrastructure development, Water quality management in freshwater fish culture, Marketing, economics and entrepreneurship development in freshwater fish culture farms followed by a farm visit along with hands-on training on Best Management Practices (BMPs), feeding, water quality management of freshwater fish culture ponds. Dr. G. Arul Oli, Assistant Professor and Head i/c, Department of Fisheries Extension, Economics and Statistics organised the program and co-ordinated by Dr.B.Manikandan, Dr.V.Gomathy, and Ms.M.Geetha, Assistant Professors (C), Department of Fisheries Extension, Economics and Statistics. A total of 22 trainees were attended and benefitted from the training programme.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சியானது 30.12.2024 அன்று நடத்தப்பட்டது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியில் நன்னீர் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பானது 30.12.2024 அன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் மொத்தம் 22 பயிற்சியாளர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இப்பயிற்சியினை மீன்வளக் கல்லூரிமற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், மீன்வளவிரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, திருவைகுண்டம் டிவிஎஸ் சினிவாசன் சேவை மையத்துடன் இணைந்து, நடத்தியது. தூத்துக்குடி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொ) முனைவர் நீ, நீதிச்செல்வன் அவர்கள் பயிற்சியை தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் நன்னீரில் வளர்க்கப்படும் மீன் இனங்கள், பண்ணை குட்டை உருவாக்குதல் மற்றும் நன்னீர் மீன்வளர்ப்புக்கான உபகரணங்கள், நன்னீர் மீன்வளர்ப்பில் நீர்த்தரமேலாண்மை, வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சி முனைவர் கோ. அருள் ஒளி,உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு, முனைவர் பூ. மணிகண்டன், முனைவர் வெ. கோமதி மற்றும் செல்வி ம. கீதா, உதவிப் பேராசிரியர்களால் (C) நடத்தப்பட்டது.