தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியின் மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வாயிலாக வருகின்ற ஜனவரி மாதம் 31ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சியில் நன்னீரில் வளர்க்கப்படும் பல்வேறு முக்கியமான அலங்கார மீன் இனங்கள், முட்டை மற்றும் குட்டி ஈனும் அலங்கார மீன் இனங்களின் இனப்பெருக்கம், அலங்கார மீன்களுக்கான உயிர் உணவுகள், நீர்தரக் கட்டுப்பாடு, செயற்கை உணவு தயாரித்தல், நோய் மேலாண்மை, பொருளாதாரம் மற்றும் சிறந்த பண்ணை மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்கள் செயல்முறை விளக்கங்களோடு கர்ப்பிக்கப்படவுள்ளன. அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், சுய தொழிலாக இதனை ஏற்று நடத்த முனைவோருக்கும் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்குப் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ. 300. பயிற்சியில் பங்குபெற ஆர்வம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள 8870389155, 8122382403, 9892045661 மற்றும் 9994450663 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
நன்னீர் அலங்கார வளர்ப்பில் ஆர்வமுடையவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் தெரிவித்துக்கொள்கிறார்.