The Physical Education and NSS Unit of TNJFU- Fisheries College and Research Institute, Thoothukudi celebrated the 11th International Yoga Day on 21.06.2025. Dr.B.Ahilan, Dean, Fisheries College and Research Institute, Thoothukudi presided over the function. During his presidential address, he explained origin of yoga in India and remembered the contribution of our Honorable Prime Minister Shri Narendra Modi for declaring of International Yoga Day by the UN Council during 2014. The Fisheries College and Research Institute, Thoothukudi is also giving Yoga practices to the staff and students twice in a week as extra curriculur activity. He also urged the staff and students to practice yoga regularly. A special lecture on value of Yoga in current Life style was given by Mr.K.Parthasarathi, Yoga Master, Five Element Yoga Reactive Therapy, Thoothukudi. He demonstrated the most important Asanas and Muthras in everyday life for the students and staff. Mr. Sakthivel, Yoga Master also delivered a special lecture among the participants. More than 250 Nos. of students and staffs of this Institute attended and practiced common yoga protocol on the occasion. The Yoga Masters were honoured with mementos. Mr.M.Muruganantham, NSS Programme Officer delivered the welcome address and Dr.D.Natarajan, Assistant Director of Physical Education offered the vote of thanks.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையத்தில் யோகா தினம் 21.06.2025 அன்று கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 11வது உலகளாவிய யோகா தினமானது 2025ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர். ப. அகிலன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இந்தியாவில் உருவாகிய யோகா கலைகளையும் அதனை உலகளாவிய கலைகளாக்க நமது பாரத பிரதமர் 2014ம் ஆண்டிலிருந்து ஆற்றிய பங்கு குறித்தும் நினைவுபடுத்தினார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வாரத்திற்கு இரண்டு முறை ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்க்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே. அனைவரும் இதில் பங்குபெற்று உடல் நலம் மேன்மை பெற வேண்டுகோள் விடுத்தார். தூத்துக்குடியில் உள்ள ஐம்புலன் யோகாகலை குருவான திரு.கா. பார்த்தசாரதி அவர்கள் தற்போதைய வாழ்வு முறையில் யோகா கலையின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும், தற்போதைய வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான யோகாசனங்களை பற்றி விரிவாக விளக்கி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 250 ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள். இந்த விழாவில் யோகா கலை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவிற்கான வரவேற்புரையை திரு.மு.முருகானந்தம், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் நிகழ்த்தினார் மற்றும் நன்றியுரையை முனைவர். த. நடராஜன், உதவி உடற்கல்வி இயக்குநர் அவர்கள் ஆற்றினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் மற்றும் நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செய்து இருந்தனர்.