"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

Launch of Insurance for freshwater fish farming and shrimp farming at TNJFU, Nagapattinam

Launch of insurance for freshwater fish farming and shrimp farming was conducted on the “World Fisheries Day”, 21.11.2022 at Tamil Nadu Dr. J.Jayalalithaa Fisheries University, Nagapattinam. The programme was presided by Prof. G. Sugumar, Vice- Chancellor, TNJFU, Nagapattinam. Dr. A. Arun Thamburaj, IAS, District collector, Nagapattinam was the chief guest and released Aquaculture Insurance products. Dr. S. Balasundari, Dean, Dr. MGR FC&RI, Thalainayeru welcomed the gathering, On this occasion Mr. Gowthaman, Chairman, TNFDC and Th. O. S. Maniyan, MLA of Vedaranyam constituency gave felicitation addresses. Dr. N. Felix, Registrar TNJFU, Dr. J. Stephen Sampath Kumar, Director of Research i/c have also delivered felicitation addresses. MOU was signed between TNJFU and Alliance Insurance on this occasion. Mr. B. K. Sinha, Chief Manager, Oriental Insurance company Ltd., New Delhi explained the Aquaculture Insurance products. Dr. T. Ravishankar, Principal scientist, ICAR-CIBA, Chennai delivered a talk on the importance of insurance for aquaculture. Mr. Sumant Salian, Associate Director and Mr. C.A.Srinivasan, Vice President of Alliance Insurance Pvt Ltd., Chennai contributed for the successful launch of Aquaculture Insurance products. There were 132 shrimp and fish farmers and 30 aquaculture inputs suppliers participated in this programme. In addition, Joint Director and Assistant Director of Fisheries, Nagapatinam, General Secretary, All India Prawn Farmers Federation and officials from state and central government organizations, executives from aquaculture industries graced the occasion.

நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 21.11.2022 அன்று உலக மீன்வள தினத்தை முன்னிட்டு நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் உவர்நீர் இறால் வளர்ப்பிற்கான காப்பீடு திட்டம் வெளியிடுதல் நிகழ்வு காலை 10.30 மணியளவில் துவங்கப்பட்டது. இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் Dr. A. அருண் தம்புராஜ் அவர்கள், வருகை தந்து சிறப்புரை ஆற்றி மீன், இறால் வளர்ப்புக் காப்பீடு திட்டங்களை வெளியிட்டு இவ்விழாவை சிறப்பித்தார். மேலும், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். கோ. சுகுமார் அவர்கள், தலைமை உரை ஆற்றினார். ஓரியன்ட்ல் காப்பீடு நிறுவனத்தின் தலைமை மேலாளர் திரு. B. K. சின்ஹா அவர்கள், இந்த காப்பீடு திட்டத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைஞாயிறு டாக்டர். எம். ஜி. ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர். சு. பாலசுந்தரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்த விழாவில் தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகத் தலைவரான திரு. N. கௌதமன் அவர்களும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரான திரு. O. S. மணியன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். இந்த நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர். N. பெலிக்ஸ் அவர்களும், ஆராய்ச்சி இயக்குனர் முனைவர். J. ஸ்டீபன் சம்பத் குமார் அவர்களும், சிறப்புரையாற்றினார்கள். இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்துடன் அலையன்ஸ் காப்பீடு நிறுவனம் புரிந்துணர்வு ஓப்பந்ததில் கையெழுத்திட்டது. இந்த நிகழ்வில் 132 இறால் மற்றும் மீன் பண்ணையாளர்களும், மற்றும் 30 மீன், இறால் வளர்ப்பை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். மேலும், இந்த விழாவில் மீன்வளத்துறை மண்டல இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர், மீன், இறால் தீவன உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரிகள், பண்ணை இடு பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் முகவர்கள், மத்திய, மாநில அரசு நிறுவன அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.