"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

04365 - 241444



TAMIL NADU Dr. J. JAYALALITHAA FISHERIES UNIVERSITY SIXTH CONVOCATION PRESS NEWS

The Sixth Convocation of the Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University (TNJFU), was held at its administrative Headquarters in Nagapattinam on 30.11.2019 in the gracious presence of Hon’ble Governor of Tamil Nadu and the Chancellor of the University, Thiru. Banwarilal Purohit.

Prof. S. Felix, Vice-Chancellor of the University welcomed the gathering and presented the report of the University. The Vice-Chancellor informed that the demand for fisheries professionals and paraprofessionals in the year 2025 would be around 4000 and 25,000 respectively. Foreseeing this huge manpower requirement, the University is already on right track by offering maximum number of UG, PG and Ph.D programmes among the Fisheries Universities of the Country i.e., 37 Courses (11-UG; 14-PG; 12-Ph.D.) through its 45 constituent units spread across the State. This ‘need of the hour’ effort by the University doesn’t mean mere production of graduates but delivering ‘highly competent professionals’ as required by the fisheries based industries, which is ensured by maintaining global standard in Teacher-Student ratio - 1:6 i.e., 112 teaching faculty for 700 plus students and recruiting only Ph.Ds for entry level Assistant Professor positions as per UGC guidelines.

Further, Quality in imparting education resulted in fourteen of our University students topped in the All India PG Entrance Examination conducted by Indian Council of Agricultural Research (ICAR), New Delhi and a graduate of our University bagged the ‘Best Fisheries Graduate of the Year’ award from the Professional Fisheries Graduate Forum (PFGF), Mangaluru. The overall quality of the University was also acknowledged by ICAR, by ranking it as the number one State Agricultural University (SAU) in Tamil Nadu and 25th in the Country. This congenial learning environment has already made TNJFU as a dream destination to national and international students to pursue higher education in fisheries which subsequently resulted in tripling of University’s Gross Enrollment Rate in the past two years. In addition to all the achievements, the University is proud to be the first in the Country to deliver highly qualified 20 B.Tech fisheries engineers to the Country which also makes this convocation unique and special.

 The Vice-Chancellor wholeheartedly thanked  Thiru. D. Jayakumar, Hon’ble Minister for Fisheries and Pro-Chancellor of the University for his continuous support to the University. Further he added, the recent fund sanctioned for establishment of an Aquatic Animal Health Laboratory in the University premises with an estimated cost of Rs. 53 Lakh and extension of the students hostel and education & administration block in Dr. M.G.R. Fisheries College and Research Institute, Thalainayeru at an estimated cost of Rs. 11.16 Crore are a few such examples for the support.

The Chief Guest of the day, Dr. Gopal Krishna, Vice Chancellor, ICAR-Central Institute of Fisheries Education (CIFE), Mumbai presented and delivered the Convocation Address. The Chief Guest in his address appreciated the University’s effort in ensuring sustainable aquaculture and deep sea fishing in this State through its two exclusive technical directorates and offering four UGC approved paraprofessional vocational degree programs. He also informed that TNJFU has created a remarkable visibility and open-up greater opportunities for the youth of the State and the Country by disseminating Biofloc technology to increase fish production, Recirculatory Aquaculture System (RAS) technology for intensive fish production, Aquaponics based integrated farming, popularization of fish products through ‘Kayalaham’ and more importantly serving the farmers continuously through feed and health testing labs, ‘Mobile Aqua Labs’ and ‘Aqua One Centers’.

Dr. K. Gopal, I.A.S., Principal Secretary to Government, Department of Animal Husbandry, Dairying and Fisheries, Tamil Nadu; Dr. G. S. Sameeran, I.A.S., Director of Fisheries, Tamil Nadu and other high level district administrative officials were the other noted dignitaries who graced the occasion.

A total of 111 graduates were conferred with the degrees ‘In-Person’ which includes 5 Ph.D., 22 Master of Fisheries Science, 65 Bachelor of Fisheries Science and 19 B.Tech. (Fisheries Engineering) degrees. Further, a total of 22 graduates and postgraduates will receive their degrees ‘In-Absentia’.

            The Chancellor presented overall 33 medals for academic excellence and performance to the students. Selvi. R.H. Hermon Jisha bagged the maximum number of 10 medals for her B.F.Sc., study. Selvi. K. Shasti Risha, Thiru. K. Madhan and Thiru. T. Paul Nathaniel received one Medal each in the B.F.Sc. degree programme. Selvi. M. Vinothini Vaz received one Medal in the B.Tech. (Fisheries Engineering) degree programme. For the M.F.Sc. degree programme, Selvi. M. Muthu Abishag received 7 Medals, Selvi. Drishya Antony, Tmt. N. Kalaiselvi and Selvi. R. Gopika received 2 Medals each, Selvi. Kapparapu Sai Susmitha Bhargavi, Selvi. K. Keerthika, Tmt. A. Thanalakshmi and Thiru. P. Kodeeswaran received one Medal each. Tmt. M. Menaga received 2 Medals in Ph.D. degree programme. 

தமிழ் நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஆறாம் பட்டமளிப்பு விழா பத்திரிக்கைச் செய்தி

    தமிழ் நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஆறாம் பட்டமளிப்பு விழா 30.11.2019 சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.  இப்பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு தமிழக ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் உயர்திரு. பன்வாரிலால் புரோகித் அவர்கள் தலைமையேற்று மாணவர்களுக்குப் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுக. ஃபெலிக்ஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கி பல்கலைக்கழகத்தின் அறிக்கையை சமர்பித்தார்.  அவ்வறிக்கையில், 2025-ம் ஆண்டில் மீன்வளம் சார்ந்த தொழில்களுக்கு ஏறத்தாழ 4000 மீன்வளப் பட்டதாரிகளும், 25000 மீன்வள தொழில்சார் பட்டதாரிகளும் தேவையுள்ளது என குறிப்பிட்டார். இத்தேவையை முன்கூட்டியே உணர்ந்து இப்பல்கலைக்கழகமானது மற்ற மாநில மீன்வளப்பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியாக நாட்டிலேயே அதிகப்படியாக, 37 மீன்வளம் சார்ந்த படிப்புகளை (11- இளநிலை,   14-முதுநிலை, 12-முனைவர்) தமிழகம் முழுவதும் உள்ள தனது  45 உறுப்பு நிலையங்கள் மூலம் வழங்கி வருகிறது.  இவ்வாறாக அதிகப்படியான படிப்புகளை வழங்குவதின் நோக்கம், மீன்வளம் சார்ந்த தொழில் நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மிகவும் தகுதியான பட்டதாரிகளை உருவாக்குவதே ஆகும். இப்பல்கலைக்கழகம் மூலம் வெளிவரும் பட்டதாரிகளின் தரத்தை உறுதி செய்வதற்காகவே 1:6 ஆசிரியர் மாணவர் விகிதாசாரத்தை உலகத்தரத்திற்கு இணையாக இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. அதாவது 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 112 ஆசிரியர்கள் இப்பல்கலைகக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.  அதோடு மட்டுமல்லாது பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி மீன்வளம் சார்ந்த முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இப்பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர்களாக பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின் தரத்தின் வெளிப்பாடாகவே இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தால் (ஐஊஹசு) நடத்தப்படும் அகில இந்திய முதுநிலை நுழைவுத்தேர்வில் 14 மாணவர்களும், மங்களூரிலுள்ள மீன்வள தொழில்சார் பட்டதாரிகள் பேரவையால் (ஞகுழுகு) நடத்தப்படும்  ‘இந்தியாவின் தலைசிறந்த மீன்வள பட்டதாரி’ போட்டியில் ஒரு மாணவரும் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளனர்.  பல்கலைக்கழகத்தின் தரத்தை உறுதி செய்து இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமானது, தமிழக அளவில் மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில் முதலிடத்தையும் தேசிய அளவில் மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில் 25-ம் இடத்தையும் இப்பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.  இவ்வாறான சிறந்த கல்வி பயிலும் சூழல் நிலவுவதாலேயே இப்பல்கலைக்கழகத்தில் பயில மற்ற மாநில மற்றும் சர்வதேச மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.   இதன் விளைவாகவே கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தின் மொத்த மாணவர் சேர்க்கை அளவானது மும்மடங்கு அதிகரித்துள்ளது.  இவைபோல், பல சாதனைகளை இப்பல்கலைக்கழகம் நிகழ்த்தி இருப்பினும், நம் நாட்டிலேயே முதல் முறையாக மிகச்சிறந்த 20 பி.டெக். மீன்வளப் பொறியாளர்களை வழங்குவது இப்பல்கலைக்கழகத்திற்கும் இப்பட்டமளிப்பு விழாவிற்கும் சிறப்பாகும்.  மேலும், துணைவேந்தர் அவர்கள்,  இச்சாதனைகளை நிகழ்த்த உதவிபுரிந்த மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக இணைவேந்தர் திரு.டி. ஜெயக்குமார் அவர்களுக்கும் தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.  மேலும் அவர், பல்கலைக்கழக வளாகத்தில் நீர்வாழ் உயிரின நல ஆய்வகம் அமைக்க ரூ.53.00 இலட்சம் மற்றும் தலைஞாயிறு மீன்வளக் கல்லூரியின் விடுதி மற்றும் நிர்வாகக் கட்டிடங்களின் விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.11.16 கோடி நிதி வழங்கி இருப்பதே, அரசின் தொடர் ஒத்துழைப்பிற்கு சான்று என்றும் தெரிவித்தார்.  

நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட மத்திய மீன்வள கல்வி நிலையத்தின் துணைவேந்தர், முனைவர். கோபால் கிருஷ்ணா, பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.  அவ்வுரையில் மாநிலத்தின் வளங்குன்றா நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பை உறுதி செய்ய இரு பிரத்யேக தொழில்நுட்ப இயக்குநகரங்களை கொண்டிருப்பதற்காகவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (ருழுஊ) ஒப்புதல் பெற்று மீன்வளத்தில் நான்கு தொழில்முறை பட்டங்களை வழங்குவதற்காகவும் பல்கலைக்கழகத்தை பாராட்டினார். மேலும், அவர், இப்பல்கலைக்கழகமானது, உயிர்கூழ்மத்திரள் தொழில்நுட்பத்தின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரித்தல்; மறுசுழற்சி நீர்வாழ் உயிரின வளர்ப்பு அமைப்பு மூலம் அதி-தீவிர மீன் உற்பத்தி; அக்வாஃபோனிக்ஸ் சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணை; கயலகங்களின் மூலம் மதிப்புகூட்டிய மீன் பொருட்களின் விற்பனை; தீவன மற்றும் நல ஆய்வகங்கள், நடமாடும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு  ஆய்வகம், அக்வா ஒன் சென்டர் ஆகிய ஆய்வகங்களின் மூலம் பண்ணையாளர்களுக்கு தொடர் சேவை திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் மூலம் இளம் மீன்வள பட்டதாரிகளுக்கு சுயதொழிலுக்கான புதிய வாய்ப்புகளை நாடு முழுவதும் இப்பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துவதில் முன்னணி வகிக்கிறது என தெரிவித்து பாராட்டினார்.

டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப.,  முதன்மை செயலாளர், கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை; டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., மீன்வள இயக்குநர் மற்றும் பிற உயர் பதவி வகிக்கும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இப்பட்டமளிப்பு விழாவில் 5 மாணவர்களுக்கு முனைவர் பட்டங்களும், 28 மாணவர்களுக்கு முதுநிலை பட்டங்களும், 65 மாணவர்களுக்கு இளநிலை பட்டங்களும் மற்றும் 19 மாணவர்களுக்கு இளநிலை மீன்வள பொறியியல் பட்டங்கள் என மொத்தம் 111 மாணவ மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கப்பட்டன.  மேலும், 22 மாணவ மாணவியர்கள் தங்களது பட்டங்களை தபால் மூலம் பெற உள்ளனர்.
    மேதகு ஆளுநர் அவர்கள் மொத்தம் 33 பதக்கங்களை மாணவர்களின் வெவ்வேறு கல்வி சாதனைகளுக்காக வழங்கினார்.  இதில் சு.ழ. ஹெர்மன் ஜிஷா அதிகபட்சமாக 10 பதக்கங்களை தனது இளநிலை பட்டப்படிப்பிற்காக பெற்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். செல்வி மு. ஷஸ்டி ரிஷா, திரு. மு. மதன் மற்றும் திரு.கூ. நத்தானியல் ஆகியோர் தலா ஒரு பதக்கத்தை இளநிலை பட்டப்படிப்பிற்காக பெற்றனர். மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்பிற்கான பதக்கத்தை செல்வி ஆ. வினோதினி வாஸ் பெற்றனர்.  முதுநிலை பட்டப்படிப்பிற்காக செல்வி ஆ. முத்து அபிஷாக் 7 பதக்கங்களையும், செல்வி த்ரிஷ்யா ஆண்டனி, திருமதி என். கலைச்செல்வி, செல்வி சு. கோபிகா ஆகியோர் தலா 2 பதக்கங்களையும், செல்வி கப்பரப்பு சாய் சுஷ்மிதா பார்கவி, செல்வி.மு. கீர்த்திகா, திருமதி ஹ. தனலெட்சுமி மற்றும்                       திரு. ஞ. கோடீஸ்வரன் ஆகியோர் தலா 1 பதக்கம் பெற்றனர்.  முனைவர் பட்டப்படிப்பில் திருமதி. ஆ. மேனகா 2 பதக்கங்களை பெற்றனர்.